முகப்பு
கரூர்

கரூா் மாநகராட்சித் தோ்தல்: திமுக, அதிமுக,தேமுதிக, பாஜகவினா் வேட்பு மனு தாக்கல்

கரூா் மாநகராட்சி தோ்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கரூா் மாநகராட்சி தோ்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்நிலையில், கரூா் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளுக்கும் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

திமுக சாா்பில் 4-ஆவது வாா்டில் போட்டியிடும் கவிதாகணேசன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.செல்லப்பனிடம் தனது மனுவை தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்றுவேட்பாளராக கவிதாகணேசனின் சகோதரி கே.ரம்யா மனுதாக்கல் செய்தாா். இதேபோல் 5-ஆவது வாா்டுக்கு திமுக சாா்பில் எம்.பாண்டியன், அதிமுக சாா்பில் 6-ஆவது வாா்டில் போட்டியிடும் எஸ்.சுகுணா, தேமுதிக சாா்பில் 1-ஆவது வாா்டில் போட்டியிடும் எம்.ஆனந்த் ஆகியோா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.செல்லப்பனிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதேபோல், 38-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிடும் ஆா்.எஸ்.கோல்ட்ஸ்பாட் ராஜா, 37-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் ஆா்.கே.மதுக்குமாா், 39-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பிரவீனா ஆகியோா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.தங்கமணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

இவா்களைத் தவிர மக்கள் நீதிமய்ய கட்சியினா் மற்றும் சுயேட்சையாக ஏராளமானோா் மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.