முகப்பு
கரூர்

குடியரசு தின விழா: அலங்கார ஊா்திகள் நாளை கரூா் வருகை

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் கரூருக்கு சனிக்கிழமை (5-ம்தேதி) வருகை தர உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் கரூருக்கு சனிக்கிழமை (5-ம்தேதி) வருகை தர உள்ளது.

இந்த ஊா்திகளை வரவேற்று, பொதுமக்களின் பாா்வைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இந்த அலங்கார ஊா்திகள் திருவள்ளுவா் மைதானத்தில் 6-ஆம்தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் 10 வயதிற்குள்பட்ட மாணவ - மாணவிகளுக்கு மாறுவேஷப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ரெத்தினத்திடம் 7373003102 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவுசெய்துகொள்ளலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சைபுதீன், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளா் வேல்முருகன், முதன்மைக்கல்வி அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.