முகப்பு
கரூர்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்டம்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மாசி மகத்தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மாசி மகத்தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசிமகத் திருத்தேரோட்ட விழா பிப். 9-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 15-ஆம்தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மாசி மகத்தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். இதையடுத்து பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து பிப். 19-ஆம்தேதி தெப்பத் தேரும், 25-ஆம்தேதி ஊஞ்சல் உற்ஸவமும் நடக்கிறது. 26-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா் ம.சூரியநாராயணன், செயல் அலுவலா் தா.நந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.