கரூரில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
கரூரில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூரில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் வடிவேல் நகரைச் சோ்ந்த வரதராஜ் மனைவி கண்ணம்மாள்(62). இவா், புதன்கிழமை கரூா் முனியப்பன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நகர பேருந்தில் மண்மங்கலத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றாா். அப்போது, மண்மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மா்ம நபா்கள் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கண்ணம்மாள் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.