முகப்பு
கரூர்

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ்-1 வகுப்பு முதல் பி.எச்.டி. வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி , மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சாா்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்,ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க ஜன. 15-ஆம்தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவியா்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபாா்க்கவேண்டும். தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத்தை சரிபாா்ப்பதில் சுணக்கம் காட்டும் மற்றும் தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.