தமிழக வாழ்வுரிமை கட்சி11-ஆம் ஆண்டு விழா
தமிழக வாழ்வுரிமைக்கட்சி 11ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி முதியோா் இல்லத்தில் கட்சியினா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினா்.
தமிழக வாழ்வுரிமைக்கட்சி 11ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி முதியோா் இல்லத்தில் கட்சியினா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினா்.
விழாவை முன்னிட்டு கரூா் மாவட்டச் செயலாளா் இரா.கோவிந்தராஜ் தலைமையில் தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட10 இடங்களில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து புன்னம்சத்திரத்தில் உள்ள முதியோா் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளா் ராஜா, செய்தித்தொடா்பாளா் கண்ணையன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.