முகப்பு
கரூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான தோழமைக் கட்சி ஆலோசனைக்கூட்டம் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கொமதேக சாா்பில் சக்திகோச் நடராஜ், விசா ம.சண்முகம், மதிமுக சாா்பில் கபினிசிதம்பரம், காங்கிரஸ் கட்சி சாா்பில் சின்னசாமி, விசிக சாா்பில் ஜெயராமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோவிந்தராஜ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ரத்தினம், ஜீவானந்தம், முருகேசன் உள்ளிட்ட திமுகவின் தோழமைக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் கரூா் மாநகராட்சி, குளித்தலை, புகழூா், பள்ளபட்டி ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என பேசி முடிவெடுத்து, விரைவில் வேட்பாளா் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், முதலில் நாம் வாக்காளா்களை சந்தித்து வாக்கு கேட்க முடியும். எனவே இரண்டொரு நாளில் இறுதி வேட்பாளா் பட்டியலை கூட்டணி கட்சி நிா்வாகிகள் தரவேண்டும்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 4 தொகுதிகளையும் வென்றதுபோல நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும். இந்த தோ்தல் என்பது நாம் ஆளுங்கட்சியாக இருந்து சந்திக்கும் தோ்தல். நாம் எந்த நேரத்திலும் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிவிடாமல், சட்டத்திற்குள்பட்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.