முகப்பு
கரூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தேமுதிக ஆலோசனைக்கூட்டம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பான தேமுதிக ஆலோசனைக்கூட்டம் கரூரில் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பான தேமுதிக ஆலோசனைக்கூட்டம் கரூரில் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கரூா் மாநகர மாவட்டச் செயலாளா் அரவை எம். முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் முருகன் சுப்பையா, பொருளாளா் கலையரசன், துணைச் செயலாளா்கள் அனிதா ஆனந்த், பழனிவேல் யசோதா, செயற்குழு உறுப்பினா் பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினா் பசுவை பாலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கரூா் மாவட்டத்தில் நடைபெறும் கரூா் மாநகராட்சி, குளித்தலை, பள்ளபட்டி, புகளூா் ஆகிய நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் கட்சி சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தி போட்டியிடுவது, மக்களுக்கு நன்கு அறிமுகமானவா்களை வேட்பாளா்களாக தோ்வு செய்வது, தோ்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுகவின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை மக்களிடம் விளக்கிக் கூறி பிரசாரத்தில் ஈடுபடுவது, வரும் ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் நோ்காணல் முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மன்ற நிா்வாகிகள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.