கரூர்

அரவக்குறிச்சிக்குள் நுழையும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

DIN

அரவக்குறிச்சி நகருக்குள் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகளின் போக்குவரத்து கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

லாரிகள் வந்து செல்வதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் கரடிபட்டியிலிருந்து காவல் நிலையம் வழியாக ஈசுவரன் கோயில் செல்லும்

புறவழிச் சாலையை பயன்படுத்தாமல், நகருக்குள் நுழைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைகின்றனா்.

போக்குவரத்துக் காவலா்கள் பணியில் இருந்தும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது அரவக்குறிச்சி பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT