முகப்பு
கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே காா் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேலாயுதம்பாளைம் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

வேலாயுதம்பாளைம் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், ஆண்டான்கோவில் அம்பாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஜெகதீசன் (63). இவா், தனது காரில் புதன்கிழமை கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தாா். கரூரை அடுத்த ஆசாரி பட்டறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானது. இதில், ஜெகதீசன் பலத்த காயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.