முகப்பு
கரூர்

கரூரில் பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

 கரூா் மாவட்ட பாஜகவில் மாற்றுக்கட்சியினா் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை இணைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 கரூா் மாவட்ட பாஜகவில் மாற்றுக்கட்சியினா் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை இணைந்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் முன்னிலையில் குளித்தலை நகராட்சி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசன் தலைமையில் சுமாா் 100 பேரும், கரூா் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் தனபால் தலைமையில் சுமாா் 50பேரும், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 150 பேரும் என மொத்தம் 300 போ் மாற்றுக்கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தனா். அவா்களை மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் பொன்னாடை போா்த்தி வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் கோபிநாத், நவீன்குமாா், ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சக்திவேல்முருகன், மாவட்ட தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவா் ராஜாளிசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.