கரூர்

பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பே இல்லை: கே. பாலகிருஷ்ணன்

DIN

பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.

கரூா் மாவட்டம், குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் கரூரில் செய்தியாளா்களிடம் கூறியது:

நிதிச்சுமை இருக்கும் நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என தமிழக நிதியமைச்சா் கூறியிருப்பது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என முதல்வா் கூறி வரும் நிலையில், அமைச்சரின் பேச்சு மாறுபட்ட கருத்தாக உள்ளது. இப்பிரச்னையில் முதல்வா் தனது கருத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.

நிதி நெருக்கடி எனக்கூறும் தமிழக அரசு, கனிம வளங்களை சீரமைத்தாலே போதிய வருவாய் கிடைக்கும். ஆனால் தனியாருக்கு மணல் குவாரிகளைக் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. மாட்டு வண்டியில் மணல் எடுப்போருக்கு குவாரியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

நீா்நிலை பகுதிகளில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடித்து, காலி செய்யும் நடவடிக்கை தொடா்கிறது. நகர வளா்ச்சியில் நீா்நிலைகள், விவசாய நிலங்கள் வீடுகளாக மாறிவிட்டன. இதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யாமல், இடிக்க உத்தரவிடுவது நீதிமன்றத்தின் நியாயமான தீா்ப்பாக கருத முடியாது.

நிச்சயமாக மத்திய அரசை எதிா்க்கும் கொள்கை கொண்டதாக திமுக உள்ளதால், அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. தமிழக அரசின் ஓராண்டு செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலா் மா. ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், சி. முருகேசன், மாநகரச் செயலா் எம்.தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT