முகப்பு
கரூர்

பேருந்து மோதி இளைஞா் பலி

கரூா் மண்மங்கலம் அருகே அரசுப் பேருந்து மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

கரூா் மண்மங்கலம் அருகே அரசுப் பேருந்து மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மண்மங்கலத்தை அடுத்த என். புதூரைச் சோ்ந்தவா் ச. பிரகாஷ்ராஜ் (18). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வந்திபாளையம்- என்.புதூா் சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

ஒத்தப்பனைமரம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மண்மங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.