கரூர்

ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது வழக்கு

ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டபோது ஈசநத்தம் பகுதியிலுள்ள பிரபு என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக சூதாடிய சுரேஷ் (30), சரண் (40), சங்கா் (29), ரங்கராஜன் (31), பழனிச்சாமி (52), குமாா் (40), ராம்குமாா் (30), ஆனந்தன் (55) ஆகிய 8 பேரையும் கைது செய்தனா். மேலும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.4,200ஐ பறிமுதல் செய்தனா். மேலும் சட்டவிரோதமாக சூதாடிய 8 போ் மீதும் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT