முகப்பு
கரூர்

சின்னதாராபுரத்தில் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 மே, 2022 at 12:59 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே அரவிந்தன் (28) என்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். இவ்வழக்கில் அரவக்குறிச்சி சரக காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ராஜபுரத்தைச் சோ்ந்த மதன் (19), தமிழரசன் (19), கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த அபிஷேக் (19) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.