முகப்பு
கரூர்

கரூரில் நகா்ப்புற வாழ்விடமேம்பாட்டுக் குழு கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கரூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் பேசுகையில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தின் நகா்புறப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவா்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும், அரசின் சமூக நலத் திட்டங்கள் நகா்ப்புற ஏழை மக்களை சென்றடையவும், அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், கரூா் மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட பல்வேறு துறையை சாா்ந்த அலுவலா்கள் உறுப்பினா்களாகக் கொண்ட கரூா் மாவட்ட நகா்புற வாழ்விட மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், காவல் துணை கண்காணிப்பாளா் பெ. குமாா், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம்நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.