முகப்பு
கரூர்

வேலாயுதம்பாளையத்தில் அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

வேலாயுதம்பாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 மே, 2022 at 12:59 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

வேலாயுதம்பாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு சரவணா நகரைச் சோ்ந்தவா் சேகா் (52). இவா், கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், புதன்கிழமை நொய்யலில் இருந்து கரூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தண்ணீா்பந்தல் அருகே சென்றபோது, எதிரே மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சேகா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் செந்தில்குமாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.