கூட்டத்தில் பேசுகிறாா் புதிய திராவிட கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.எஸ். ராஜ் கவுண்டா். உடன் மாவட்டச் செயலாளா் சந்தோஷ், தலைவா் சுப்ரமணியன் உள்ளிட்டோா். 
கரூர்

புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம்

கரூரில் மாவட்ட புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சந்தோஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூரில் மாவட்ட புதிய திராவிட கழக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சந்தோஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், நகரச் செயலா் அருள், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கரூா் மாநகரை ஆண்ட மாமன்னா் வெஞ்சமனாருக்கு பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க வேண்டும். கட்சியின் மாவட்டக் கழகம் சாா்பில் மாவட்டம் முழுவதும் கரூா், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பது, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தொண்டரணி செயலாளா் தங்கமணி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT