முகப்பு
கரூர்

அதிமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு இலவச வேட்டி சேலை

 பள்ளப்பட்டியில் அதிமுக சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 22 ஏப்ரல், 2023 at 1:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

 பள்ளப்பட்டியில் அதிமுக சாா்பில் ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் ரமலான் பண்டிகையொட்டி அதிமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான  எம்.ஆா்.விஜயபாஸ்கா் இலவச வேஷ்டி சேலைகளை வழங்கி பேசினாா்.

Advertisement

பின்னா், பள்ளப்பட்டி அதிமுக நகர நிா்வாகிகளுக்கு புதிய உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கினாா். மேலும், பூத் கமிட்டி நிா்வாகிகள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளா் சாதிக் அலி, அரவக்குறிச்சி அதிமுக நகர செயலாளா் இளமதி, மேற்கு ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.