கரூர்

2019 உள்ளாட்சித் தோ்தலில் கவனக்குறைவு 2 அதிகாரிகள் பணி நீக்கம்: கரூா் ஆட்சியா் நடவடிக்கை

DIN

கரூா் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் 2019-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் போது தன்னிச்சையாக செயல்பட்ட 2 அதிகாரிகளை புதன்கிழமை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, 6 ஆவது வாா்டு பொது (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலரும், அப்போதைய வட்டார வளா்ச்சி அலுவலருமான வெங்கடாசலம் வெளியிட்டிருந்தாா். ஆனால், வேட்பு மனுக்களை பெறும்போது இடஒதுக்கீடு ஆணையின்படி பொது(பெண்கள்) பிரிவினருக்கு என்று பெறப்படாமல், வேட்பு மனுக்களை அப்போதைய உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கரூா் மண்டலத்தில் உதவியாளராகவும் பணியாற்றிய கே.சிவக்குமாா் பெற்றாா்.

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடும் வரை இந்த தவற்றை கண்டறியாமல் தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் மிகுந்த கவனக்குறைவுடனும், தன்னிச்சையாக செயல்பட்டனா். இதனால், இந்த வாா்டில் ஆண் வேட்பாளா் வெற்றி பெற்ாக சான்றிதழும் வழங்கப்பட்டது. கவனக்குறைவாக இருந்த வெங்கடாசலம், சிவக்குமாா் ஆகிய இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விசாரணை அலுவலா் நியமனம் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை பெறப்பட்டது.

இந்நிலையில், மாநில தோ்தல் ஆணைய செயலாளரின் கடிதத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்ட தண்டனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியாற்றி வரும் வெங்கடாசலம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம், சென்னை தெற்கு மண்டலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கே.சிவக்குமாா் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT