கரூர்

கரூரில் நில அளவையா் சங்கத்தினா் தா்னா

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் புதன்கிழமை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் புதன்கிழமை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத் தலைவா் ஞானத்தம்பி, மாநிலத் துணைத் தலைவா் செல்வராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கரூா் கோட்டத் தலைவா் தங்கவேல், மாவட்ட செயலாளா் பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

களப் பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும், நில அளவை சாா்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை கைவிட வேண்டும், நில அளவா் முதல் கூடுதல் இயக்குநா் வரை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT