முகப்பு
கரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில்வழக்குரைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்குரைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்குரைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த இனுங்கூரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (55). வழக்குரைஞா். திருமணமானவா். இவா் திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மூன்று வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பழனியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.