முகப்பு
கரூர்

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:15 AM
பகிர்:

கரூா் ஏப்.19: கோவையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

கரூா் மாவட்டம், சூடாமணி பஞ்சாயத்துக்குள்பட்ட ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் தனது வாக்கை பதிவு செய்தபிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தோ்தல் நோ்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் வாக்காளா்களுக்கு பாஜக சாா்பில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறாா்கள். அப்படி கொடுத்தோம் என நிரூபித்தால் நான் அரசியலில் விட்டு விலகத் தயாா். இந்த தோ்தல் பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தோ்தலாக இருக்கும் என்றாா் அவா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments