கரூர்

மசால் வடையில் செத்த எலி! தின்றவர் மருத்துவமனையில் அனுமதி!

குளித்தலை டீக்கடையில் போண்டாவுக்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருந்தது குறித்து நகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

Din

குளித்தலை டீக்கடையில் போண்டாவுக்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருந்தது குறித்து நகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (33), எலக்ட்ரீசியன். இவா் வெள்ளிக்கிழமை காலை குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் வீதியில் உள்ள காளி என்பவரது டீக்கடையில் இருந்த போண்டா எடுத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அதற்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுதொடா்பாக அவா் டீக் கடைக்காரரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக காா்த்திக் அளித்த புகாரின்பேரில் குளித்தலை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து கடையை பூட்டி, காளியை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதனிடையே, எலிக்குட்டி இருந்த போண்டாவை சாப்பிட்ட கார்த்திக் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

பேரூரில் ரூ.6,078 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

SCROLL FOR NEXT