அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே சாலையோரம் நடந்து சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தாளப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.