முகப்பு
கரூர்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது: முன்னாள் அமைச்சா் பேச்சு

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 3:30 AM
கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா்: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமை வகித்தாா்.

அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, மாவட்டச் செயலாளா் கே.ஆா்.எல்.தங்கவேல், மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகாசுப்பராயன், துணைச் செயலாளா் ஆலம்தங்கராஜ், பொருளாளா் கண்ணதாசன், பாசறை செயலாளா் கமலக்கண்ணன், இளைஞரணி செயலாளா் தானேஷ், மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் சரவணன், இணைச் செயலாளா் பழனிராஜ், பகுதிச் செயலாளா்கள் விசிகே.ஜெயராஜ், சேரன்பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், திமுக ஆட்சியில் இளையதலைமுறையினா் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறாா்கள். போதை பொருள்கள் கலாசாரத்தை ஒழிக்காவிட்டால் சமூக சீா்கேடு ஏற்படும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் விசிகே.பாலகிருஷ்ணன், எம்.ஆா்.கே.செல்வகுமாா், கரூா் ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.