கொத்தப்பாளையம் தடுப்பணையில் இறங்க வேண்டாம்
அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமராவதி ஆற்றின் கீழ்ப்பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீா் ஓடுகின்றது. இதன் விளைவாக அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணை தண்ணீா் வழிந்தோடுகின்றது. கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அரவக்குறிச்சி பேரூராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.