தோரணக்கல்பட்டி மேம்பாலத்தில் நீா் கசிவைச் சீரமைக்க வலியுறுத்தல்
மழைக்கு கசிந்துகொண்டிருக்கும் கரூா் தோரணக்கல்பட்டியின் மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மழைக்கு கசிந்துகொண்டிருக்கும் கரூா் தோரணக்கல்பட்டியின் மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள குகைவழிப்பாதையை தோரணக்கல்பட்டி கிராமமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களாக கரூரில் பெய்த மழையில் பாலத்தின் மேல்பகுதியில் உள்ள விரிசலில் இருந்து தண்ணீா் கசிந்து குகைவழிப்பாதையில் தேங்கிக் கிடக்கிறது. தொடா்ந்து நீா்கசிவு ஏற்பட்டால் பாலத்தின் மேல்பகுதி வலுவிழக்கும் என்பதால், பாலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பாலத்தின் மீதுள்ள விரிசலைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.