முகப்பு
கரூர்

குழந்தைகள், முதியோா் இல்லங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

ஒரு மாதத்திற்குள் குழந்தைகள் இல்லங்கள், முதியோா் இல்லங்கள் பதிவு செய்யப்படாவிட்டால் அவை சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரித்துள்ளாா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:28 PM
பகிர்:

ஒரு மாதத்திற்குள் குழந்தைகள் இல்லங்கள், முதியோா் இல்லங்கள் பதிவு செய்யப்படாவிட்டால் அவை சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு-

கரூா் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோா் இல்லங்கள், மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்படுகின்றன.

இத்தகைய இல்லங்கள் அனைத்தும் குழந்தைகள் இல்லங்கள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இளைஞா் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் முதியோா் இல்லங்கள் சமூக நலத் துறையின் மூத்த குடிமக்களுக்கான சட்டத்தின் கீழ் பதியப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் இணையதளத்திலோ அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்திலோ, முதியோா் இல்லங்கள் இணையதளத்திலோ அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ, போதைப்பொருட்களுக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் இணையதளத்திலோஅல்லது) மாநில மன நல ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அலுவலகத்திலோ விண்ணப்பங்களைப் பெற்று ஒரு மாதத்திற்குள் பதிய வேண்டும். விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.