முகப்பு
கரூர்

ஆவணி மாத வளா்பிறை அஷ்டமி: கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு நொய்யல் பகுதி சிவன் கோயில்களில் கால பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:20 PM
நன்செய்புகழூா் மேகபாலீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் புதன்கிழமை காட்சியளித்த காலை பைரவா்.
பகிர்:

ஆவணி மாத வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு நொய்யல் பகுதி சிவன் கோயில்களில் கால பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரா் கோயிலில் காலபைரவருக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல புன்னம் பகுதி புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி, திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன், நத்தமேடு ஈஸ்வரன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளானோா் தரிசனம் செய்தனா்.