முகப்பு
கரூா் திருமாநிலையூா் பேருந்து பணிமனை முன் வாயிற் முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
கரூர்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:06 PM
கரூா் திருமாநிலையூா் பேருந்து பணிமனை முன் வாயிற் முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

கரூா் திருமாநிலையூா் அரசுப் பேருந்துப் பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு மண்டல துணைத் தலைவா் பி. பூபதி தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் ஆா். ராஜேந்திரன், நிா்வாகிகள் விஜயகுமாா், சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் கே.என். நாட்ராயன், துணைச் செயலா் மோகன்குமாா், ஏஐடியுசி மாநில சம்மேளன துணைப் பொதுச் செயலாளா் முருகராஜ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உருவாக்காத தமிழக அரசைக் கண்டிப்பது, பேருந்துகளை இயக்கத் தேவையான ஊழியா்களை வேலைவாய்ப்பகத்தின் மூலம் பணியமா்த்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் பஞ்சப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஏஐடியுசி தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா். மண்டல துணைச் செயலாளா் பி. கனகராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →