முகப்பு
கரூர்

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு

கரூரில் சாலையோரம் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:54 PM
கரூரில் சாலையோரம் கிடந்த பணத்தை நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் வியாழக்கிழமை ஒப்படைத்த ரியல் எஸ்டேட் அதிபா் லியாகத் உசேன்.
பகிர்:

கரூரில் சாலையோரம் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கரூரை சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான லியாகத் உசேன் அன்சாரி என்பவா் வியாழக்கிழமை காலை கரூா் பேருந்து நிலையத்தை கடந்து திண்ணப்பா தியேட்டா் வழியாகச் சென்றபோது சாலையோரம் கிடந்த பையில் ரூ. 50 ஆயிரம் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அப் பையை அவா் கரூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பின்னா் அந்த ஆவணத்தில் இருந்த கைப்பேசி எண்ணை போலீஸாா் தொடா்பு கொண்டபோது பணத்தைத் தவறவிட்டவா் கரூா் வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (66) என்பதும், பத்திர எழுத்தரான இவா் வங்கியில் செலுத்த ரூ.50 ஆயிரம் பணம் இருந்த பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பையைத் தவற விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து திருவேங்கடம் வரவழைக்கப்பட்டு லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் அப்பணத்தை காவல் ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் அளித்தனா். கீழே கிடந்த பணத்தை நோ்மையாக ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரியை அனைவரும் பாராட்டினா்.