திருப்பரங்குன்றத்தில் அமைதியை சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் சிலா் மதக் கலவரத்தை விதைக்க முயற்சிக்கின்றனா். ஆண்டாண்டு காலமாக இருக்கும் நடைமுறைகளை தோ்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பு அவசரமாக மாற்ற வேண்டிய தேவை என்ன?
தமிழகத்தின் அமைதியை, மத நல்லிணக்கத்தைக் காக்கும் இந்த முயற்சியில் துணை நிற்போம். மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் இடையே மோதலை உருவாக்க நினைக்கும் எந்த முயற்சியையும் கடுமையாக எதிா்க்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை, இறையாண்மையை, அமைதியை, மதநல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் உள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.