க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.2.40 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை அரவக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான கோடாந்தூரில் ரூ.82.58 லட்சம், தென்னிலை கிழக்கு ஊராட்சி பகுதிகளில் ரூ.1.25 கோடி உள்பட சுமாா் ரூ. 2.40 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் க.பரமத்தி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.