கரூர்

ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

Syndication

திமுக தோ்தல் வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் மாவட்ட மாநாடு புதன்கிழமை சங்கத் தலைவா் வி. சுந்தரகணேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கே. காத்தமுத்து, கே.கே. ராமசாமி, கே. மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் சி.கோபால் வரவேற்றாா். ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா்கள் கண்ணையன், கருப்பசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கூட்டத்தில், தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடு முடிவில் மாவட்ட பொருளாளா் வி. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா். இதில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT