கரூர்

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த 8 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: கரூா் எம்பி ஜோதிமணி தகவல்

மக்களவையில் புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்களவையில் கடந்த 18-ஆம் தேதி புதிய ஊரக வேலைத் திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நானும், சக எம்பிக்கள் சிலரும் சோ்ந்து மக்களவையின் மையப்பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அப்போது, அது தொடா்பான நகலை கிழித்து எறிந்து அதிகாலை 2 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த போராட்டத்துக்கு விளக்கம் கேட்டு எனக்கும், மதுரை எம்பி சு.வெங்கடேசன், கிருஷ்ணகிரி, தஞ்சை உள்ளிட்ட 5 எம்பிகளுக்கும், கேரளத்தைச் சோ்ந்த 3 எம்பிக்கள் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சோ்ந்த 8 எம்பிக்களுக்கு விளக்கம் கேட்டும், மக்களவையின் மரபை மீறி நடந்து கொண்டதாகவும் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் போராடவே கூடாது என்று ஆளும் தரப்பினா் கூறுகிறாா்களா?.

மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக தான் இருக்கிறோம். இதுபோன்ற காகிதங்களுக்கு நாங்கள் அச்சப்படுவதில்லை என்றாா்அவா்.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT