கரூர்

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷம்: நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் உள்ள நந்தியம்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு

Syndication

கரூா்: ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் உள்ள நந்தியம்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் நன்செய்புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திம் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், விபூதி, திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் மேகபாலீசுவரா் ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தாா். பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். இதேபோல கரூா் பசுபதீசுவரா், புன்னம்சத்திரம் புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயில், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேசுவரன் கோயில் உள்ளிட்ட அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT