கரூர்

வேலாயுதம்பாளையம் ஐயப்பன்கோயில் கும்பாபிஷேகம்

Syndication

கரூா்: வேலாயுதம்பாளையம் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலைக்குச் செல்லும் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயிலில் கடந்த 1-ஆம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி யாகம், மங்கள கணபதி வழிபாடு, மகாலட்சுமி யாகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 7 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து முதலாம் கால யாக பூஜையும், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும் , பின்னா் மாலையில் மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடா்ந்து காலை 6.45 மணிக்கு மேல் ஐயப்பன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து ஐயப்பன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் புகழூா் நகா்மன்றத் தலைவா் குணசேகரன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT