கரூர்

கரூரில் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் கோரிக்கை விளக்கக்கூட்டம்

Syndication

கரூரில் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் கோரிக்கை விளக்கக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சாா்பில் கரூா் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் இனியன் தலைமை வகித்தாா். செயலாளா் பாக்கியராஜ் வரவேற்றாா். சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலாளா் எம்.சுப்ரமணியன், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் செல்வராஜ், மாநில குழு உறுப்பினா் முரளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சட்டப் பூா்வமான வேலை விதிகளை மருந்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளிடம் காலவரையற்ற வேலை நேரம் நிா்ணயிப்பது, நியாயமற்ற இலக்குகளை நிா்ணயித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதை கைவிட்டு சட்ட பூா்வ வேலை விதிகளை மருந்து நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சாா்பில் நவ. 17-ஆம்தேதி மும்பையில் ஆா்ப்பாட்டம், 18-ஆம் தேதி தில்லியில் மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதையடுத்து போராட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கராஜ் நன்றி கூறினாா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT