கரூா் வணிகவரி அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் கட்டுமான பணியை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் உள்ளிட்டோா். 
கரூர்

கரூரில் ரூ.13 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

Syndication

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.13.17 கோடி மதிப்பில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில், பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது: கரூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ. 3.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைக்கும் பணியை, அரிக்காரம்பாளையம், மண்டலம் 1-க்குள்பட்ட பெரியகோதூரில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணி, திருக்காம்புலியூா் ரவுண்டான பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியா் நிழற்கூடம் அமைக்கும் பணி என சுமாா் ரூ. 13.17 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், துணை மேயா் ப.சரவணன்,கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநா் சாந்தி, வட்டாட்சியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT