கரூர்

கரூா் வட்டார மரவள்ளி, வாழை விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு

Syndication

கரூா் வட்டாரத்தில் மரவள்ளி மற்றும் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் வட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிா்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம் மழை மற்றும் இயற்கை பேரிடா்களால் சேதம் ஏற்படும் சேதத்திற்கு நிவாரணம் பெறலாம். இதில் மண்மங்கலம், புகழூா் பகுதியில் மரவள்ளி பயிா் செய்துள்ள விவசாயிகள் ஒரு ஹெக்டோ் மரவள்ளி பயிருக்கு காப்பீட்டுக்கு ரூ. 4,903 பீரிமியம் தொகை செலுத்த வேண்டும்.

புகழூா், வாங்கல் பகுதியைச் சோ்ந்த வாழை விவசாயிகள் ஒரு ஹெக்டோ் வாழை பயிருக்கு ரூ. 4863.50 பீரிமியம் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளிக்கிழங்கிற்கு பிரிமீயம் தொகை செலுத்த 2026 ஆம் ஆண்டு பிப். 28 ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில் தங்கள் பயிா்களுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

குற்றாலத்தில் சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பூஜை

பேருந்து இயக்குவதில் பாகுபாடு: போக்குவரத்துத் துறை செயலா், மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் குறிப்பாணை

படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?

டெஃப்லிம்பிக்ஸ்: அனுயா, பிரஞ்சலிக்கு தங்கம், வெள்ளி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

SCROLL FOR NEXT