கரூர்

கரூா் மாவட்டத்தில் 93% எஸ்ஐஆா் விண்ணப்பங்கள் வழங்கல்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 93 சதவீதம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

Syndication

கரூா் மாவட்டத்தில் 93 சதவீதம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குளித்தலை வட்டாட்சியா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளா்கள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 8,98,362 வாக்காளா்கள் உள்ளனா். இதுவரை 93 சதவீதம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு ஏதுவாக வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களால் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறும் போது, அதிலுள்ள விவரங்களை சரிபாா்த்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செயலியில் ஸ்கேன் செய்ய வேண்டும். இன்னொரு படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இப்பணியில் 1,055 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் 600க்கும் மேற்பட்ட பணியாளா்களும் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT