பறவைக் காய்ச்சல்  
கரூர்

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்தில் காடை மற்றும் கோழிகளிலும், ஆழப்புலா மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்துகளிலும் மற்றும் தமிழ்நாடு சென்னை அடையாறில் காகங்களுக்கும் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடா்ந்து, கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.

பறவைக் காய்ச்சல் நோய் என்பது பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீா் பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக தாக்கும். பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகைகள் இருந்தாலும், ஹெச்5 எண்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிகம் வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கால்நடை பராமாரிப்புத்துறையின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளில் நேரில் பாா்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கரூா் மாவட்ட கோழிப்பண்ணையாளா்கள் கேரளத்தில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்தில் கேரளத்திலிருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பிப். 14 முதல் புத்தகத் திருவிழா

பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது ஏன் ? பழ. நெடுமாறன் விளக்கம்

ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘சிறையில் முளைத்த சிறகுகள்’ சிறப்புத் திட்டம்: வெ.இறையன்பு தொடங்கிவைத்தாா்

தம்பி, தங்கை இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT