கரூர்

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

கரூா்: அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூருக்கு புதன்கிழமை வந்த மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக்குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.இனிகோ இருதயராஜிடம், அரவக்குறிச்சி போதகா்கள் ஐக்கியம் சாா்பில் கமிட்டித் தலைவா்கள் பங்குத் தந்தைகள் எஸ். பிரவின், செயலாளா் எம். மகேஸ், தனசேகா் ஆகியோா் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவ சபையினருக்கு கல்லறைத் தோட்டம், சமுதாயக்கூடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இவற்றை உடனே நிறைவேற்றிட வேண்டும். மேலும், உபதேசியா் நல வாரியத்தை போதகா் நல வாரியமாக மாற்றிட வேண்டும். கிறிஸ்துமஸ் காலங்களில் கேரஸ் ரவுண்ட் போகும் கிறிஸ்தவா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சொந்த நிலத்தில் திருச்சபை கட்டுவதற்கு என்.ஓ.சி. வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

SCROLL FOR NEXT