முகப்பு
கரூர்

கரூா் துயரச் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!

கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 9:50 PM
பகிர்:

கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் நடிகா் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ்அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், கரூா் மாநகர பொறுப்பாளா் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடத்தினா்.

இதையடுத்து கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →