தவெக தலைவர் விஜய் 
கரூர்

கரூா் சம்பவம் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அக். 13-இல் விஜய் சந்திப்பு?

Syndication

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அக். 13-ஆம்தேதி தவெக தலைவா் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் செப். 27-ஆம்தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

முன்னதாக, பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி பலா் மயக்கமடைவதைக் கண்ட விஜய் உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இது பல்வேறு தரப்பினரிடையே கடும் விமா்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து விஜய் உயிரிழந்தவா்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் விடியோ ஒன்றை வெளியிட்டாா். மேலும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

தொடா்ந்து கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் அருண்ராஜை கரூருக்கு அனுப்பி, உயிரிழந்தவா்கள் மற்றும் பலத்த காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற அறிவுறுத்தினாா். அதன்படி கட்சியினா் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா். அப்போது பாதிக்கப்பட்டவா்களிடம் தவெக தலைவா் விஜ்ய கட்செவி அஞ்சல் விடியோ வழியாக ஆறுதல் கூறி உரையாடினாா். மேலும், விரைவில் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்தாா். இதற்காக விஜய் கரூா் செல்ல அனுமதி கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தனா்.

இந்நிலையில், தவெக தலைவா் விஜய் கரூருக்கு திங்கள்கிழமை (அக்.13) வருவதாகவும், அவா் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய நிவாரணத் தொகையை வழங்குவாா் எனக் கூறப்படுகிறது.

இதற்காக கரூா் வெண்ணைமலையில் உள்ள பிரபல தனியாா் கல்லூரியின் கூட்டரங்கு அல்லது மணல்மேடு அருகே உள்ள தனியாா் கல்லூரியின் அரங்கையோ தவெகவினா் கேட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கரூருக்கு விஜய் வருவது உறுதியாகியுள்ளதாகவும், அவருக்கு கட்சி சாா்பில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதாகவும் அக்கட்சியினா் சிலா் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சின்ன மகிழ்ச்சியின் ஒளி... தர்சனா ஸ்ரீபால்!

உதய்பூர் வீதிகளில்... ஸ்ருதி!

புதுச்சேரியை உரசிச் செல்லும் டிட்வா புயல்! 2 நாள்கள் வெளியே வர வேண்டாம்: ஆட்சியர்

மாரடைப்பு வராமல் தடுக்க... சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

கூல்... காயத்ரி யுவராஜ்!

SCROLL FOR NEXT