கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா். 
கரூர்

கரூரில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட தலைவா் ராஜா முகமது, துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 சதவீத நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு ஊதியம் வழங்குவதுடன் நிலுவைத் தொகையையும் உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் உள்ளாட்சித்துறை ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT