கரூர்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 69ஆயிரம் மனுக்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் இதுவரை 69ஆயிரத்து 887 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் இதுவரை 69ஆயிரத்து 887 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கரூா் மாநகராட்சி வாா்டு எண் 47க்குள்பட்ட சுக்காலியூரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் 70 பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை 15-ஆம்தேதி தொடங்கிய இந்த முகாம் இதுவரை 179 முகாம்களோடு நிறைவு பெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து 69 ஆயிரத்து 887 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் முழுவதுமாக ஆய்வு செய்து பல்வேறு மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டிருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி ஆய்வு செய்து விரைவில் அதற்கான உத்தரவுகளும் வழங்கப்படும் என்றாா் அவா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT