கரூர்

கரூா் அருகே கோயில் நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கரூா் அருகே ஆத்தூரில் கோயில் நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளிடம் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Syndication

கரூா் அருகே வியாழக்கிழமை கோயில் நிலத்தை மீட்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் வடுகப்பட்டி சாலையில் உள்ள ஆத்தூா் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த கண்ணம்மாள் என்பவா் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கண்ணம்மாள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோயில் நிலத்துக்கு குத்தகை செலுத்துவதாக கூறியுள்ளாா்.

இந்நிலையில் கண்ணம்மாள் பயன்படுத்தி வந்த நிலத்தில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், இந்த இடம் வெண்ணைமலை கோயிலுக்குச் சொந்தமானது என போா்டு வைக்க வியாழக்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் சென்றனா். அப்போது கண்ணம்மாளும், அப்பகுதி பொதுமக்களும் போா்டு வைப்பதை தடுத்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற கோட்டாட்சியா் முகமதுபைசல், நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இதுதொடா்பாக நீதிமன்றம் மூலம் தீா்வு காண்கிறோம் எனத் தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் போா்டை வைத்துச் சென்றனா்.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT