முகப்பு
கரூர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 4:05 AM
முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 8:23 PM

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது மனைவிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு யூனிட் ஆற்றுமணலை சட்டவிரோதமாகக் கொட்டி வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் விஏஓ சண்முகம் கடந்த 12-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கடந்த 2 நாள்களுக்கு முன் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளவழகன் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Advertisement